அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியில் NVQ தரச் சான்றிதழுக்கான தொழிற்பயிற்சி பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன: ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் யுவதிகள் விண்ணப்பிக்க முன்வாருங்கள்…

தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி திணைக்களத்தால் நாடு முழுவதிலுமுள்ள தொழில்நுட்பக் கல்லூரிகள் ஊடாக நடாத்தப்படுகின்ற NVQ தரச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளக்கூடிய முழுநேர மற்றும் பகுதிநேர தொழிற்பயிற்சிப் பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதன்படி, அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியில் இவ்வாண்டு (2021) நடாத்தப்படவுள்ள 19 வகையான தொழிற்பயிற்சிப் பாடநெறிகளுக்கான விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கத் தகைமையுள்ள ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் நிரந்தரமாக வசிக்கின்ற பாடசாலைக் கல்வியை நிறைவு செய்த இளைஞர் யுவதிகள் தமக்கான விண்ணப்பப்படிவங்களை அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியில் பெற்றுக்கொள்ள முடிவதுடன், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பிரிவிலும் பெற்றுக்கொள்ளலாம்.
மேலதிகத் தகவல்களுக்கு 077 9599968 என்ற கையடக்கத் தொலைபேசி இலக்கத்தினூடாக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தரை, அல்லது 077 6590212 என்ற இலக்கத்தினூடாகத் திறன் அபிவிருத்தி உதவியாளரைத் தொடர்வுகொள்ளமுடியும்.
விண்ணப்ப முடிவுத் திகதி 29.01.2021 ஆகவும் காணப்படுகின்றது.
நன்றி – Divisional Secretariat, Alayadivembu முகநூல் பக்கம்