இளைஞர் பாராளுமன்ற தேர்தலிற்கு எமது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இருந்து கரிகரன் டிலக்ஷன் வேட்புமனுத்தாக்கல்…

இளைஞர் பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் 22 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் எமது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இருந்து கரிகரன் டிலக்ஷன் கடந்த புதன்கிழமை (12) அம்பாறை மாவட்ட செயலகத்தில் வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இருந்து வேட்புமனுத்தாக்கல் செய்த கரிகரன் டிலக்ஷன் அவர்களை இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறச்செய்வதற்கு அனைத்து இளைஞர் யுவதிகளும் ஒற்றுமையுடன் செயல்பட்டு கரிகரன் டிலக்ஷன் வெற்றிபெற செய்து எமது பிரதேசத்தில் சிறந்த ஒரு இளைஞர் சமுதாயத்தை கட்டியெழுப்பி சமூக மேன்பாடு அடையச்செய்வோம்.
மேலும், குறித்த இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 22 ஆம் திகதி காலை 8 மணி முதல் 4.30 மணிவரை இடம்பெறவுள்ளதோடு 18 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர் யுவதிகள் தங்களது பிரதேச செயலகங்களில் தமது வாக்குகளை அளிக்க முடியும்.
இதற்காக குறித்த வயதுக்குட்பட்ட இளைஞர்கள் www.nysc.lk என்ற இணை யத்தளத்துக்குள் உட்பிரவேசித்து எதிர்வரும் 20 ஆம் திகதி நள்ளிரவு 12 வரை வாக்காளர்களாக தங்களை பதிவு செய்துகொள்ள முடியும்.
மேலதிக விபரங்களை பிரதேச இளைஞர் சேவை அதி காரிகளுடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளவும் முடியும்.