மாவட்ட மட்ட விளையாட்டு போட்டி முதன் முறையாக திருக்கோவில் பிரதேத்தில்….

ஜே.கே.யதுர்ஷன்
33வது இளைஞர் தேசிய விளையாட்டு விழா 2021 இளைஞர் விவகார விளையாட்டு துறை அமைச்சினால் அம்பாரை மாவட்ட கபடி போட்டியானது திருக்கோவில் பிரதேச செயலகத்திலுள்ள உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் திருக்கோவில் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி கே.பிரபாகரன் தலைமையில் நேற்று (05) நடைபெற்றது.
இந் விளையாட்டுபோட்டியில் அம்பாறை மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் ஆண் பெண் என இருபாலர்களும் கலந்து கொண்டனர்.
இவ் நிகழ்வில் அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் தமயந்தி கங்கா சாகரியா மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ.முபாரக்கலி நிஷ்கோ முகாமையாளர் சிரிவர்த்தன மற்றும் இளைஞர் சேவை அதிகாரிகள் நடுவர்கள் பயிற்றுவிப்பாளர்கள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந் போட்டி இறுதி போட்டி முடிவுகள் பெண்கள் அணியில் முதலாம் இடத்தினை நாவிதன்வெளி பிரதேச செயலகம் இரண்டாம் இடம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஆண்கள் அணியில்
முதலாம் இடத்தினை நிந்தவூர் பிரதேச செயலகம் இரண்டாம் இடம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் வெற்றி பெற்று தேசிய மட்ட போட்டியில் கலந்து கொள்ள தெரிவு செய்யப்படுள்ளார்கள்.