உலகம்
வான்தாக்குதலில் 31 தலிபான்கள் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதலில் 31 தலிபான்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், அரச படையினருக்கும் இடையே தொடர்ந்து நீண்டகால போர் நீடித்து வருகிறது.
பயங்கரவாத குழுக்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி விடுத்த அழைப்பு தோல்வியில் முடிந்தது. இதன்காரணமாக தலிபான்கள் அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் பர்யாப் மாகாணத்தின் பசந்த்கோட் மாவட்டத்தில் பதுங்கியுள்ள தலிபான்களை குறிவைத்து விமானப்படை வான்வழி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் இரண்டு வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.