இலங்கை
இலங்கைக்கான அரிசி இறக்குமதி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தம்: ஜனாதிபதி உத்தரவு!
இலங்கைக்கான அரிசி இறக்குமதியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்டே ஜனாதிபதி, இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் 12ஆவது நாளில், எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்படாது என அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டிருந்தார்.
பெரும்போகத்திற்குத் தேவையான உர விநியோகம் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.