ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பெய்து வரும் பலத்த மழையால் வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்து பல குடும்பங்கள் பாதிப்பு.

ஆலையடிவேம்பு பிரதேச பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்ந்து வந்த மழையினால் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தை தடுக்கும் முகமாகவும் விவசாய நிலங்கள் மற்றும் தாழ்நிலப்பிரதேங்களில் சூழ்ந்துள்ள வெள்ளநீரை வெளியேற்றும் பொருட்டும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் ஜேசிபி வாகனத்தின் உதவியுடன் நேற்று அகழ்ந்துவிடப்பட்டது.
இருந்த போதிலும் தொடர்சியாக பெய்ந்து வந்த மழையினால் இதுவரை பல வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவில் பெய்து வரும் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்கள் கிராம சேவகரிடம் அறிவிக்குமாறும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதேச செயலகத்தினரினால் உரிய ஏற்பாடுகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட உள்ளதாகவும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் குறிப்பிட்டார்.
மேலும் மழை பெய்வது தொடர்ந்தால் வீதிகள் குடியிருப்புக்கள் என பல இடங்களும் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்படுவதுடன் வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்து பலகுடும்பங்கள் பாதிக்கப்படும் அனர்த்தம் ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.