இலங்கை
பழைய முறையில் மாகாண சபைகளுக்கான தேர்தல்; விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் ஏற்பாடு

மாகாணசபைத் தேர்தலை பழைய முறையிலேயே நடத்துவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என செய்தி வெளியாகியுள்ளது.
இதன்படி கடந்த ஆட்சியின்போது மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை இல்லாது செய்வதற்காக மாகாண சபைச் சட்டத்தில் திருத்தமொன்று மேற்கொள்ப்படவுள்ளது.
மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஷ, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் எனவும் தெரியவருகின்றது.
இது தொடர்பில் இருவருக்குமிடையில் தொலைபேசி ஊடாக கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.