இலங்கை
இலங்கையில் முதன்முறையாக ஒரே நாளில் 3051 பேருக்கு கொரோனா தொற்று!!

இலங்கையில் முதன்முறையாக ஒரு நாளில் பெருமளவான கோவிட் தொற்றாளர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்றைய தினம் மாலை ஆறு மணி வரையில் 3,051 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 150,771 ஆக அதிகரிக்கின்றது. இலங்கையில் அண்மைக்காலமாக நாளாந்தம் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வந்த நிலையில், இன்றைய தினம் மூவாயிரத்தை தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இறுதியாக நேற்று மேலும் 34 பேர் பலியாகியுள்ளதாகவும் நேற்றுவரை இலங்கையில் 1015 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.