அமெரிக்காவின் மருத்துவ சேவையை விட அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வழங்கப்படும் சேவை சிறந்தது என அமெரிக்க பிரஜை பாராட்டு

அமெரிக்காவின் மருத்துவ சேவையை விட அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வழங்கப்படும் சேவை சிறந்தது என அமெரிக்க பிரஜை பாராட்டு தெரிவித்து வைத்தியசாலையின் பரிந்துரை குறிப்பேட்டிலும் பதிவு செய்த சம்பவம் 11ஆம் திகதி நடைபெற்றுள்ளது.
Eliana Apicella எனும் அமெரிக்க பிரஜை அண்மையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வயிற்று வலியால் அவதிப்பட்ட நிலையில் விடுதி 6 இல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு குடல்வளரி அழற்சி (Appendicitis) இருப்பது கண்டறியப்பட்டு குடல் வளரியை அகற்றும் அறுவைசிகிச்சை (Appendicectomy) சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் பி.கே.ரவீந்திரன் தலைமையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து அவர் பூரண சுகத்துடன் சத்திர சிகிச்சை விடுதியை விட்டு வெளியேறும் போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தனக்கு வழங்கப்பட்ட மேம்பட்ட சேவையை பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் அமெரிக்காவில் உள்ள வைத்திய சேவையை விட அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வழங்கப்படும் சேவை மிகச் சிறந்தது என்றதுடன் வைத்தியசாலையின் பரிந்துரை குறிப்பேட்டிலும் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
இது வைத்தியசாலையின் ஊழியர்களுக்கு கிடைக்கும் சிறந்ததொரு அங்கீகாரம் என்பது அனைவரது கருத்தாக அமைந்துள்ளது.
நன்றி : Akkaraipattu Base Hospital முகநூல் பக்கம்