நாளை விவசாய நடவடிக்கையில் ஈடுபட முதற்கட்டமாக 400 பேருக்கு அனுமதி- MOH எஸ்.அகிலன்

அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 500 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களை விவசாய நிலங்களுக்கு செல்ல அனுமதி தரவேண்டும் என கோரி இன்று அதிகாலை 5 மணிமுதல் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட புட்டம்பை கிராமத்தில் அமைந்துள்ள இராணுவ சோதனை சாவடிக்கு முன்பாக பசளை மற்றும் கிருமிநாசினிகள் உள்ளிட்ட வாகனங்களுடன் காத்திருந்தனர்.
ஆனாலும் அவர்களுக்கான அனுமதி கொரோனா தொற்று அச்சம் காரணமாக சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தலுக்கமைய இராணுவத்தினரால் மறுக்கப்பட்ட நிலையில் அரசாங்கம் எப்படியாவது தங்களுக்கு அனுமதி தரவேண்டும் என கூறி தங்கள் நாணயமான கோரிக்கை கருத்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.
இன் நிலையில் நாளை விவசாய நடவடிக்கையில் ஈடுபட முதற்கட்டமாக 400 பேருக்கு அனுமதி வழங்கவுள்ளதாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்திருந்தார்.
இதற்கான அனுமதி ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால் வழங்கப்பட்டுவருவதுடன் பிங்கலர் அனுமதி படிவம் வழங்கப்பட்டுவருகின்றது.
ஏற்கவே வழங்கப்பட்ட பிங்கலர் அனுமதி படிவத்தில் இருந்த குறைபாடு காரணமாக சிலர் திருப்பி அனுப்பப்பட்டனர்.
ஆயினும் தற்கால நிலையினை கருத்திற்கொண்டு அப்படிவங்களில் கையொப்பம் இட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே இதுவரையில் கையொப்பம் பெறாதவர்கள் உடனடியாக ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் சென்று பெற்றுக்கொள்ளலாம்.
கையொப்பமில்லாத அனுமதி படிவம் சோதனை சாவடியில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதும் குறிப்பிடத்தக்கது.