இலங்கை
தொழில் வாய்ப்புத் திட்டத்தில் உள்ளடக்கப்படாத 12 ஆயிரம் பட்டதாரிகள்!!

வேலை வாய்ப்பில்லாத பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் செம்படம்பர் மாதம் 2ஆம் திகதி வழங்க திட்டமிட்டுள்ள முதலாம் கட்டத்தில் 12 ஆயிரம் பட்டதாரிகள் உள்ளடக்கப்படவில்லை என பட்டதாரிகளின் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இவர்களை புறந்தள்ளாது பயிற்சிகளை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக பட்டதாரிகள் தேசிய மத்திய நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் சந்தன சூரியராச்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
2019.12.01 திகதி செல்லுப்படியான மேலும் 12 ஆயிரம் பட்டதாரிகள் இந்த பயிற்சியில் உள்ளடக்கப்பட வேண்டும். 2020 பெப்ரவரி 22ஆம் திகதி வரை ஜனாதிபதி செயலகத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பிய தகுதியான அனைத்து பட்டதாரிகளுக்கும் இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் சந்தன சூரியராச்சி குறிப்பிட்டுள்ளார்.