தொடர்ச்சியாக 02 ஆண்டாக கிழக்கிலங்கையின் 40+ Legend அமைப்பின் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி!

கிழக்கிலங்கையின் 40+ Legend அமைப்பின் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாகவும் குறித்த பிரதேச கிரிக்கட் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கின்றது.
ஆலையடிவேம்பு, திருக்கோவில் பிரதேச செயலகங்களின் எல்லைக்குள் இருக்கும் பிரபல கழகங்களின் மூத்த உறுப்பினர்களை கொண்டதான 78 வீரர்களை உள்ளடக்கி அணிக்கு 13 பேர்களைக் கொண்ட ஆறு அணிகளாக தங்களுக்குள் மோதும் கிரிக்கட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 18, 19, 20 ஆம் திகதிகளில் தம்பிலுவில் ஆதவன், தம்பட்டை 11 star மைதானங்களில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி அணிகள், கடந்த காலங்களில் கிரிக்கட் விளையாட்டில் கிழக்கு மைதானங்களில் பிரகாசித்த பல நட்சத்திர வீரர்களை உள்ளடக்கியதாக இருப்பதுவும், தற்போது சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தையுடைய தொழில்களில் சிறப்புற்று இருந்து வருகின்ற போதிலும், தகமைகள் கடந்து அனைவரும் கிரிக்கட் விளையாட்டை நேசிப்பவர்களாக ஒருமித்து மைதானங்களில் களங்காண இருப்பது இதில் அடங்கியிருக்கும் சிறப்பம்சமாகும்.
அணிகளின் விபரம்
1. Legend stars
2. Legend Worriers
3. Legend Kings
4. Legend force
5. Super Legend
6. Flash Legend
மேற்படி அணிகளை முறையே, மூத்த உறுப்பினர்களான,
லக்ஷ்மிகாந்த் – Play Boys SC
யுவேந்திரா – Youth Star SC
மகேந்திரன் – Agni SC
சுரேஸ்குமார் – ReangesSC
அகிலன் – Minnoly SC
ஜெயராஜ் – Aathawan SC
ஆகியோர் தலைமை தாங்கி வழிநடத்த இருக்கின்றனர். அத்துடன்,
முழுச்சுற்றுப் போட்டிகளுக்கான வழிகாட்டியாக (Mentor) கல்வி அதிகாரியான சிறிதரன் அவர்களும், நிதி முகாமையாளராக பொறியியலாளராக திரு.ரதீசன் அவர்களும் சிறப்புக் கடமையாற்றுகின்றனர்.