ஆலையடிவேம்பு
தை திருநாள் பண்டிகையை முன்னிட்டு அக்கரைப்பற்று சின்ன முகத்துவாரம் பகுதியில் மக்களின் மாலைப் பொழுது….

உழவர்களின் திருநாள் தை திருநாள் பண்டிகை உலகவாழ் இந்துக்களால் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக இருந்து வருகின்ற நிலையில் 2023ம் வருடத்தின் தை திருநாள் பண்டிகை இன்றைய தினம் (15) உலகவாழ் இந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
மேலும் இன்றைய தினம் பண்டிகை நாள் என்பதால் விடுமுறை நாளாகவும் இருப்பதனால் மக்கள் தங்கள் கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் முகமாக உறவினர் வீடுகள் மற்றும் பொழுதை கழிக்கும் பொது இடங்களுக்கு செல்வதும் ஒரு அங்கமாக அமையப்பெறுகின்றது.
அந்த வகையில் இன்றைய தினம் ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் பண்டிகையை முன்னிட்டு அக்கரைப்பற்று சின்ன முகத்துவாரம் பகுதியில் குடும்பம் குடும்பமாக அதிகமாக வருகைதந்து தங்கள் மாலைப் பொழுதை கழிப்பதனை காணக்கூடியதாகவும் இருந்தது.