உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கமு/திகோ/அன்னைசாரதாகலவன் பாடசாலையில் சிறுவர் தின சிறப்பு நிகழ்வு….

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கமு/திகோ/அன்னைசாரதாகலவன் பாடசாலையில் இன்று (03.10.2022) திங்கள்கிழமை காலை 08.30 மணியளவில் பாடசாலை அதிபர் திருமதி.K.துளசிநாதன் அவர்கள் தலைமையில் சிறுவர் தின சிறப்பு நிகழ்வுகள் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.
நடாத்தப்பட்டு வருகின்ற பாலர் பாடசாலை மாணவர்களுக்கான சிறுவர் தின நிகழ்வுகள் இன்று (01/10/2022) சனிக்கிழமை மாலை 03.00 மணியளவில் கோளாவில் பிரதேச பகுதியில் சிறப்பானதாக இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதமஅதிதியாக திருமதி.A.C.N.நிலோபரா (பிரதிக்கல்வி பணிப்பாளர்,திருக்கோவில்), சிறப்புஅதிதிகளாக திரு.P.பரமதயாளன்(ஆரம்பக்கல்வி பணிப்பாளர், திருக்கோவில்), திரு.K. கமலமோகனதாஸ் (முகாமைத்துவ பணிப்பாளர், திருக்கோவில்), செல்வி.S.அனுஷியா(சிரேஸ்ரவிரிவுரையாளர், தென்கிழக்கு பல்கலைக்கழகம்) கௌரவ அதிதிகளாக திரு.R.டேவிட் அமிர்தலிங்கம் (இராமகிருஸ்ணா கல்லூரி அதிபர்), திரு.P.தணிகாசலம் (ஓய்வுநிலை அதிபர்), திரு.P.யோகராஜன் (SSDO), திருமதி .S.கமலநாதன் (ஓய்வுநிலை ஆசிரியர்) மற்றும் விசேட அதிதிகளாக திரு.P.பத்மநாதன் (ஆசிரியர்), திருமதி.V.விமலநாதன் (பா.அ .நி.கு செயலாளர்) என்பவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
இவ் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் பல விளையாட்டு போட்டிகள் மற்றும் பல நிகழ்வுகள் என்பன சிறந்த முறையில் பாடசாலை ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் குறித்த நிகழ்வை பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பிரதேச மக்கள் என பலரும் பார்வையிட வந்திருந்தார்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.