தைப்பொங்கலை முன்னிட்டு ஆலையடிவேம்பு தமிழ் இலக்கிய பேரவை நடாத்தும் பொங்கல் விழா மற்றும் சிறப்பு பட்டிமன்றம் இன்று (16) பகல் 02.30 மணிக்கு….

தைப்பொங்கலை முன்னிட்டு ஆலையடிவேம்பு தமிழ் இலக்கிய பேரவை நடாத்தும் பொங்கல் விழா மற்றும் சிறப்பு பட்டிமன்றம் நிகழ்வு இன்று (16/01/2023) திங்கள்கிழமை பகல் 02.30 மணியளவில் திரு K.கிஷ்ணமூர்த்தி ( தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவர், ஆலோசகர் உளவளத்துறை ஆலோசனை மையம் மட்டக்களப்பு) அவர்களின் தலைமையில் ஆலையடிவேம்பு கலாச்சார மண்டபத்தில் இடம்பெற இருக்கின்றது.
இன் நிகழ்வின் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.வே.ஜெகதீசன் அவர்கள் மற்றும் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.K.கோடீஸ்வரன் அவர்கள் மற்றும் சிறப்பு அதிதிகள், கௌரவ அதிதிகள் விசேட அதிதிகள், ஆன்மிக அதிதிகள் மற்றும் இலக்கிய ஆளுமையாளர்கள் கலந்து சிறப்பிக்க இருக்கிறார்கள்.
இதன் போது ஆலையடிவேம்பு பிரதேச தமிழ் இலக்கிய பேரவையினால் நடாத்தப்படும் ”இன்றைய இளஞ் சமுகத்தினரின் வளர்ச்சிக்கு கரணம் குடும்பமா? சமுதாயமா? எனும் தலைப்பில் ஆக்கபூர்வமாக சமூகத்திற்கு தேவையான முக்கிய படிப்பினைகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் சிறப்பு பட்டிமன்றமும் இடம்பெற இருக்கின்றது.
பட்டிமன்றத்தின் நடுவரக இறைபணிச் செம்மல் திரு. த. கயிலாயபிள்ளை J.P அவர்கள் காணப்படுவதுடன் பட்டிமன்ற பேச்சாளர்களாக திரு. V. குணாளன் (ஓய்வு நிலை உதவிக்கல்விப் பணிப்பாளர்),திரு. N. செல்வநாதன் (ஓய்வு நிலை விரிவுரையாளர்), நெசமானிய திரு. S. மணிவண்ணன் (அதிபர்), திரு.கே.கிஷ்ணமூர்த்தி (தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவர், ஆலோசகர் உளவளத்துறை ஆலோசனை மையம் மட்டக்களப்பு) , திரு. தா.ஜெயாகர் (ஆசிரியர்), திரு. L. சஞ்சிகா (பேச்சாளர்) அவர்களும் கலந்துகொண்டு பட்டிமன்றத்தில் வாதிட இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.