எதிர் காலத்திலே மிகவும் ஆபத்தான ஒரு சூழலை ஆலையடிவேம்பு பிரதேசத்திலே ஏற்படுத்தக்கூடிய வேலையை தனிநபர்கள் செய்து கொண்டு இருக்கின்றார்கள்!!! களப்பு பகுதி மண்ணைக்கொண்டு நிரப்பும் செயற்பாடு குறித்து பா. உ தவராசா கலையரசன் பாராளுமன்றத்தில்…..

அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் அருகாமையில் அமைந்துள்ள களப்பு பகுதி மண்ணைக்கொண்டு நிரப்பும் செயற்பாடு சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்று வந்த நிலையில் அருகில் உள்ள குடியிருப்புக்கள் வெள்ள அனர்த்தத்திற்கு முகம் கொடுக்க நேரிடும் என பிரதேச மக்கள் கவலை தெரிவித்து அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர்.
எங்கள் பகுதியில் காலம் காலமாக வெள்ள காலத்தில் நீர் வடிந்தோடும் குறித்த களப்பின் பெரும்பகுதி நிரப்பப்படுவதால் அருகில் உள்ள குடியிருப்புக்கள் வெள்ள அனர்த்தத்திற்கு முகம்கொடுக்க நேரிடும் என தெரிவித்து இருந்த நிலையில்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் அவர்கள் உடனடியாக கவனம் செலுத்தியதுடன் குறித்த செயற்பாட்டினை தடுப்பதற்குரிய நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்கள்.
இன் நிலையில் பா. உ தவராசா கலையரசன் அவர்கள் (13.02.2022) அன்று சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு இருந்த நிலையில் உரிய நடவடிக்கைகளுக்காக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று இருந்தார்.
அந்த வகையில் இன்றைய தினம் (22.02.2022) குறித்த களப்பு பகுதி மண்ணைக்கொண்டு நிரப்பும் செயற்பாடு குறித்து பாராளுமன்றத்தின் தனது காட்டமான கருத்தையும் அதனுடன் தொடர்புடைய மோசடி வேலைகளில் யாரவது மேற்கொண்டு இருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாகவும்.
களப்பு பகுதி மண்ணைக்கொண்டு நிரப்பும் செயற்பாடு காரணமாக ஏற்படும் பாதிப்புக்கள் அது தொடர்வன மக்களின் நிலைப்பாடுகள் போன்றவற்றை தெளிவுபடுத்தி இருந்ததுடன் எதிர்காலத்திலே மிகவும் ஆபத்தான ஒரு சூழலை ஆலையடிவேம்பு பிரதேசத்திலே ஏற்படுத்தக்கூடிய வேலையை தனிநபர்கள் செய்து கொண்டு இருக்கின்றார்கள் என பல விடயங்களை பா. உ தவராசா கலையரசன் அவர்கள் இன்றைய தினம் பாராளுமன்றத்தில் எடுத்துரைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான காணொளி இணைப்பு….