தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று இராமகிஷ்ணா கல்லூரியின் சிரமதானப்பணி….

நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பல பகுதிகள் குப்பை நிறைந்த சூழலாக காணப்படுவதுடன் மிக மோசமான நிலையில் காணப்படுகிறது.
அதனை அகற்றி துப்பரவு செய்யும் பணி அம்பாறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இன்றைய தினம் (30) அக்கரைப்பற்று, திகோ/இராமகிஷ்ணா கல்லூரியிலும் துப்பரவு பணி முன்னெடுக்கப்பட்டது.
இப் பணியானது திகாமடுல்ல மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஆர்.எம்.அன்ரன் தலைமையில் இடம்பெற்றதுடன்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் R.திரவியராஜ் அவர்களினது ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது.
இன் நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட தேசிய மக்கள் சத்தியின் பாராளுமன்ற உறுப்பினர் Dr.மஞ்சுள ரத்னநாயக்க களவிஜயம் ஒன்றை மேற்கொண்டு சிரமதான பணியை பார்வையிட்டார்.
மேலும் இவ் நிகழ்வில் ஆலையடிவேம்பு, திருக்கோவில் பிரதேசகளின் தேசிய மக்கள் சக்தியின் தொண்டர்கள் மற்றும் சமுக அமைப்புக்களின் உறுப்பினர் இளைஞர்கள் என பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.