வீடுகளுக்கு சென்று மருத்துநீர் வழங்கப்படும். யாரும் ஆலயங்களுக்கு செல்லத் தேவையில்லை

வி.சுகிர்தகுமார்
பிரதேச செயலக மண்டபத்தில் இன்று இடம்பெற்ற கொரோனா பாதுகாப்பு செயலணி விசேட கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரிய பிள்ளையார் ஆலயம், மருதயடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயம், வம்மியடிப்பிள்ளையார் ஆலயம், ஸ்ரீ முருகன் ஆலயம், பத்திரகாளியம்மன் ஆலயம், ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், கோளாவில் விக்னேஸ்வரர் ஆலயம், பனங்காடு பாசுபதேசுவரர் ஆலயம் கண்ணகிகிராமம் பிள்ளையார் ஆலயம் உள்ளிட்ட ஒன்பது ஆலயங்களுக்கு மருத்து நீர் வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆலயங்களில் தயாரிக்கப்படும் மருத்து நீர் வாகனங்களின் உதவியுடன் நாளை(13) பகல் 11 மணிமுதல் மாலை 5 மணிவரை ஆலயங்களுக்கு பொறுப்பாக ஒதுக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள வீடுகளுக்கு கொண்டு சென்று வழங்கப்படும் எனவும் சமூக இடைவெளியை பேணி மக்கள் மருத்து நீரை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆலயங்களில் மருத்து நீர் வழங்கப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது எனவும்
எக்காரணத்தை கொண்டும் மக்கள் மருத்து நீரை பெற ஆலயங்களுக்கு செல்லக்கூடாது எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.