கனடாவை சேர்ந்த கா.யோகநாதன், பேனால்ட் இருவரும் இணைந்து 5000 பெறுமதியான 17 உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைத்துள்ளனர்.

வி.சுகிர்தகுமார்
நாட்டில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுவரும் நிலையில் பொது மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொள்வதுடன் அன்றாட தொழில் வாய்ப்பு வருமானத்தின் மூலம் குடும்பங்களை நடாத்திய பலர் மிகுந்த நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
மேலும் விசேட தேவையுடைய குடும்பங்களும் அங்கவீன குடும்பங்களும் பெரும் உணவுத்தட்டுப்பாட்டினையும் எதிர் கொண்டுள்ளனர்.
இதனை கருத்திற் கொண்ட சில புலம்பெயர் உறவுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிக்கரத்தினையும் நீட்டி வருகின்றனர்.
இதற்கமைவாக கனடா நாட்டைச்சேர்ந்த கா.யோகநாதன் மற்றும் பேனால்ட் ஆகிய இருவரும் இணைந்து அக்கரைப்பற்றை சேர்ந்த தி.சின்னத்தம்பி எனும் சமூக சேவையாளர் ஒருவர் ஊடாக 5000 பெறுமதியான 17 உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைத்துள்ளார்.
இதனை பெற்றுக்கொண்ட அக்கரைப்பற்று அன்புக்கரங்கள் இளைஞர் அமைப்பு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மற்றும் விசேட தேவையுடைய குடும்பங்களுக்கும் அங்கவீன குடும்பங்களுக்கும் வீடு வீடாக சென்று வழங்கி வைத்தனர்.
பல சமூக பணிகளை முன்னெடுத்துவரும் இவர்கள் போன்ற புலம் பெயர் உறவுகளின் சேவையை வேண்டி நிற்கும் அன்புக்கரங்கள் அமைப்பினர் குறித்த பணியை முன்னெடுத்த உறவுகளுக்கும் மக்களை தெரிவு செய்ய உதவிய ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.
இதேநேரம் குறித்த உறவுகளால் கவாடப்பிட்டி கிராமத்தில் அமைத்து கொடுக்கப்பட்ட குடிநீர் கிணற்றின் மூலம் மக்கள் அடைந்துள்ள நன்மையினையும் கண்டு மகிழ்வடைந்தனர்.