நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் வீட்டுக்குள் நுழைந்த வாள்வெட்டுக்குழு; மகன் மீது தாக்குதல்!

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் மகன் மீது இனந்தெரியாத குழு தாக்குதல் நடாத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் மூத்த மகன் மீதே இவ்வாறு இனந்தெரியாத 8 பேர் கொண்ட குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது .
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அண்மையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்குள் வாள், கண்ணாடி போத்தல், இரும்புக் கம்பிகளுடன் வீட்டுக்குள் நுழைந்த 4 மோட்டார் சைக்கிளில் வந்த குழு பா மகன் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டது.
அதோடுஅவரது மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில் அதுதொடர்பிலான வீடியோ காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.