இலங்கை
ஒரே நாடு ஒரே சட்டம் – முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட இடம் தமிழர்கள் இல்லை!

ஞானசார தேரர் என்பவர் ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பிற்கு தண்டிக்கப்பட்டு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு வௌியில் வந்ததுடன் பல்வேறு சர்ச்சைகளில் ஈடுபட்ட ஒருவர் என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ்.வல்வெட்டித்துறையில் உள்ள தனது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அப்பட்டி பட்ட ஒருவரை நியமித்து ஒரு நாடு ஒரு சட்டம் என்று வைத்தால் அதில் பெயருக்கு கூட ஒரு தமிழரும் இல்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.