திரு. கா. யோகநாதன் ஐயா (கனடா) இவரின் தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தொழில்நுட்ப கல்லூரி நிறுவுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.

திரு. கா. யோகநாதன் ஐயா (கனடா) இவர் வரும் காலத்தில் எமது ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோயில் பிரதேச மாணவர்களுக்காக தொழில் நுட்ப கல்லூரியை நிறுவுவதற்கான விருப்பத்தினை தெரிவித்துள்ளார்.
இவர் கடந்த 10 வருடமாக யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா, கிளிநொச்சி, மொனராகலை, மன்னார் போன்ற மாவட்டங்களில் வசிக்கின்ற வறுமைக்குட்பட்ட கல்வியில் மிகுந்த ஆர்வமுள்ள மாணவர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்கி வருகின்றார். மேலும் அம்பாரை மாவட்டத்திலும் இவ்வாறான 60 மாணவர்களுக்கும் மேல் மாதாந்தம் 2000ரூபா கொடுப்பனவை வழங்கி மேலும் பல சலுகைகளையும் வழங்கி கற்பித்து வருகின்றார்.
இந்நிலையில் இவர் வருங்காலத்தில் எமது ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோயில் பிரதேச மாணவர்களின் கல்வியில் தேர்ச்சி மட்டத்தை அதிகரிக்கும் நோக்குடன் கணனி, ஆங்கிலம், சிங்களம் போன்ற பாடநெறிகள் உள்ளடங்கலாக தொழில் வழிகாட்டல் கல்வி ஏனைய விஞ்ஞான கல்விகளையும் இலவசமாக வழங்கும் பொருட்டு தொழில்நுட்பக்கல்லூரியை எமது பிரதேசத்தில் நிறுவுவதற்கான விருப்பத்தினை தெரிவித்துள்ளார்.
தற்போது மல்லாவியில் இவருடைய தலைமையில் இவ்வாறான கல்லூரி நிறுவப்பட்டு சிறப்பாக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.