இலங்கை
வட மாகாண பாடசாலைகளுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு….

இணைந்த கரங்கள் அமைப்பினால் இன்று வட மாகாணத்தில் உள்ள புதுக்குடியிருப்பு கைவேலி காந்தன் முன்பள்ளி மற்றும் புதுக்குடியிருப்பு கைவேலி ஆதிபராசக்தி முன்பள்ளி ஆகிய இரு முன்பள்ளி பாடசாலைகளுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வானது 16/12/2022 காலை 11.00 மணியளவில் இரு முன்பள்ளி பாடசாலையின் பொறுப்பாசிரியர்களின் தலைமையில் இடம்பெற்றது.
மேலும் இன்நிகழ்வில் முன்பள்ளி ஆசிரியர்களான திருமதி.பிரபாகரன் ஜெகதீஸ்வரி, சதீஸ்வரன் கமலினி, தேவராசா நிரோஜினி, நடராசா லாவண்யா,சஞ்ஜீவபிரசன்னா அணித்தா ஆகிய ஆசிரியர்களும், இணைந்த கரங்களின் இணைப்பாளர் பெ.விவேகானந்தன், கோ. சிவானந்தம், லோ. கஜருபன், எஸ்,காந்தன், ந.சனாதனன், ப.சஜிந்தன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் மற்றும் விளையாட்டு உபகரணம் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.