உலகம்
சமுர்த்தி வங்கிச்சங்க ஒன்லைன் தொடர்பில் வெளியான தவறான செய்தி – உத்தியோகத்தர்கள் கவலை!

ஒன்றுபட்ட அமெரிக்காவை உருவாக்குவதற்கான தருணம் இதுவென அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர் நேற்று மாலை ஜோ பிடனின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்துள்ள அவர், “தேர்தல் பிரசாரங்கள் முடிந்துவிட்டன. கோபங்களையும் கடுமையான விமர்சனங்களையும் புறந்தள்ளிவிட்டு ஒரு தேசமாக ஒன்றுபடுங்கள்” என அழைப்பு விடுத்துள்ளார்
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பிடன் எதிர்வரும் ஜனவரி மாதம் 20ம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
மேலும் அமெரிக்காவின் முதல் பெண் உப ஜனாதிபதியாக கமலா ஹரிஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.