இலங்கை
திருக்கோவில் பிரதேச செயலக பிரிவில் சிவன் அருள் பவுண்டேசனால் கேக் தயாரிப்பு ஐசிங் பயிற்சி நெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைப்பு .

சிவன் அருள் பவுண்டேசன் ஆனது திருக்கோவில் பிரதேச செயலக பிரிவில் 32 யுவதிகளுக்கு இருவார கேக் தயாரிப்பு ஐசிங் பயிற்சி நெறியை வழங்கயிருந்தது. இதன்படி இப்பயிற்சி நெறியை இனிதே நிறைவு செய்த பயிலுனர்களுக்கான சான்றிதழ்கள் இன்றைய தினம் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.ரி.கஜேந்திரன், உதவி பிரதேச செயலாளர் திரு.கே.சதிசேகரன், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திரு.எ.முவாறக்கலி , பிரதம லிகிதர் திரு. A.சசீந்திரன், சிவன் அருள் பவுண்டேசன் செயலாளர் திரு.வே.வாமதேவன், பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி திரு.கே.பிரபாகரன் மற்றும் பயிலுனர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது