திருக்கோவில் பிரதேச கஞ்சிகுடிச்சாறு கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட வில்காமம் மக்களிற்கு நீர்தாங்கி மற்றும் உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு….

திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட வில்காமம் எனும் பகுதி வாழ் குடும்பங்களுக்கு பிரான்ஸ் வாழ் பாண்டிருப்பு உறவுகள், அவுஸ்திரேலியா வாழ் உறவுகள் மற்றும் அமெரிக்காவில் வாழ்கின்ற சிந்துநந்தன் ஆகியோரின் நிதி அனுசரனையுடன் நிவாரணப் பொதிகளும் இரண்டு நீர்த்தாங்கிகளும் திருக்கோவில் பிரதேச செயலக செயலாளர் T.கஜேந்திரன் தலைமையில் வழங்கிவைக்கப்பட்ட.
இன்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் T.கஜேந்திரன் திருக்கோவில் பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் k.சதிசேகரன் மற்றும் பொத்துவில் பிரதேச செயலாளர் திரவியராஜ் மற்றும் சிரேஷ்ர ஊடகவியலாளர் சகாதேவராஜா மற்றும் அமைப்பின் செயற்பாட்டாளர்களான கண்ணன் மற்றும் ஜெயராஜ், திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோத்தர்கள் ஆகியோர் இணைந்து இந்த நிவாரணப்பொதிகளையும் நீர்தாங்கிகளையும் அப்பகுதிவாழ் மக்களிடம் கையளித்தனர்.