இலங்கை
திருக்கோவில் சாகாமம் குளத்தில் சடலம் ஒன்று மீட்பு…

ஜே.கே.யதுர்ஷன்
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகாமம் குளத்தில் இருந்து ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸ்சார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலமானது சகாமம் குளத்தில் மிதப்பதாக பொலிஸ்சாருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது .
இச் சடலமானது ஓர் ஆண் ஒருவரின் சடலம் என இனங்காணப்பட்டுள்ளது. மேலும் இச் சடலம் யார் என்று இது வரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இச் சம்பவம் தொடர்மான விசாரனையை திருக்கோவில் பொலிஸ்சார் மேற்கொண்டு வருகின்றனர்.