இலங்கை
திருக்கோயில் சாகாமம் பகுதியில் மின்னல் தாக்கத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு அனர்த்த நிவாரண நிதி உதவி..

ஜே.கே.யதுர்ஷன்
திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட சாகாமம் பகுதியில் கடந்த (04.10.2021) ஆம் திகதி ஏற்பட்ட மழையுடன் கூடிய மின்னல் தாக்கத்தினால் சாகாமம் பாடசாலை வீதியை சேர்ந்த 06 பிள்ளைகளின் தந்தையான தம்பிமுத்து மோகனராசா மின்னல் தாக்கி மரணம் அடைந்தார்.
குறித்த நபரின் குடுபத்திற்கு ஆரம்ப கட்ட மரணச் செலவான அனர்த்த நிவாரண கொடுப்பனவினை அவரது பாரியாருக்கு திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் அவர்கள் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நேற்று (07) வழங்கி வைத்தார்.
இன் நிகழ்வில் திருக்கோவில் உதவிப்பிரதேச செயலாளர் K.சதிசேகரன் மற்றும் பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் M.அனோஜா, அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் த.தனராஜன் பகுதி கிராம உத்தியோகத்தர் திரு.பார்த்தீபன் ஆகியோர் இணைந்து இவ் அனர்த்த நிவாரண நிதியை வழங்கி வைத்தனர்.