சின்னப் பனங்காடு மகாசக்தி எழுச்சி அறநெறி, பாலர் பாடசாலை கட்டிடம் “சத்தியம்” வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பினரினால் மாணவர்கள் மனமகிழ்வுடன் கற்பதை ஊக்கிவிக்கும் முகமாக புனர்நிர்மாணம் செய்து மகாசக்தி அமைப்பினரிடம் கையளிப்பு…

-கிஷோர்-
சின்னப் பனங்காடு மகாசக்தி எழுச்சி அறநெறி, பாலர் பாடசாலை கட்டிடம் “சத்தியம்” வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பினரினால் மாணவர்கள் மனமகிழ்வுடன் கற்பதை ஊக்கிவிக்கும் முகமாக புனர்நிர்மாணம் செய்து மகாசக்தி அமைப்பினரிடம் கையளிப்பு நிகழ்வு இன்று (07) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் கோலாகலமாக இடம்பெற்றது.
குறித்த சின்னப் பனங்காடு மகாசக்தி எழுச்சி அறநெறி பாடசாலை மற்றும் பாலர் பாடசாலையில் கவடாப்புட்டி , புளியம்பத்தை , பனங்காடு , மகாசத்தி கிராமத்தைச் சேர்ந்த பல குழந்தை மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இவ் அறநெறி பாடசாலை மற்றும் பாலர் பாடசாலை மாணவர்களின் நீண்ட கால தேவையாக இருந்த அடிப்படை வசதிகளையும் , மாணவர்களுக்கு கல்வி கற்றலுக்குரிய சிறப்பான , மகிழ்வான சூழலையும் ஏற்படுத்தி மனமகிழ்வுடன் கற்பதை ஊக்குவிக்கும் முகமாக உள் சுவர்களில் கல்வி சம்பந்தப்பட்ட அழகிய ஓவியங்கள் வரையப்பட்டு அழகான முறையில் வடிவமைத்ததுடன்.
இன்றைய தினம் “சத்தியம் “ வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பின் ஸ்தாபகர் சத்தியமூர்த்தி அவர்களின் பணிப்புரைக்கு அமைய “சத்தியம் “ வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பின் கிழக்கு மாகாண பணிப்பாளர் சுவர்னராஜ் அவர்களின் ஏற்பாட்டில் புனர்நிர்மாணம் செய்யப்பட குறித்த கட்டிடம் கையளிக்கப்பட்டது.
இன் நிகழ்விற்கு மகாசக்தி அமைப்பின் தலைவி மங்கையர்க்கரசி மற்றும் மகாசக்தி அமைப்பு சார்ந்தவர்கள், பாலர் பாடசாலை மாணவர் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என்பவர்கள் கலந்துகொண்டதுடன் கொரோனத்தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளுடன் குறித்த நிகழ்வு இடம்பெற்றது .
“சத்தியம் “ (லண்டன்) வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பின் ஸ்தாபகர் சத்தியமூர்த்தி அவர்கள் ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு கல்வி சார்ந்து பல்வேறுபட்ட பல உதவிகளை தொடர்சியாக செய்து வருவதுடன்.
“சத்தியம் “ வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பின் ஸ்தாபகர் சத்தியமூர்த்தி அவர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக லண்டனில் வசிக்கும் சமூக நலன் விரும்பியின் ஆதரவோடு “சத்தியம்” வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பு சுவர்னராஜ் அவர்களின் மேற்பார்வையில் குறித்த அபிவிருத்தி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.