ஆலையடிவேம்பு
திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் நவராத்திரி பூஜை நிகழ்வு….

நவராத்திரி பூஜை நிகழ்வு இன்றைய தினம் (03/10/2022) திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி ஆராதணை மண்டபத்தில் காலை 10.30 மணியளவில் பாடசாலையின் அதிபர் ஜே. ஆர். டேவிட் அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகள் மற்றும் வினாவிடை போட்டி வில்லுப்பாட்டு என்பன இடம் பெற்றது.
நிகழ்வுகளுக்கு அதிதிகளாக பாடசாலையின் அபிவிருத்தி செயலாளர்.எஸ்.பி.அகிலன் மற்றும் பாடசாலையின் ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர் திரு.எம்.கிருபராஜா மற்றும் திரு.பெ.தணிகாசலம்
பாடசாலையின் பிரதி அதிபர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.