ஆலையடிவேம்பு
திகோ/திருவள்ளுவர் வித்தியாலயத்தில் கோலாகலமாக இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வு….

உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட, திகோ/ திருவள்ளுவர் வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வு இன்றைய தினம் (04) அதிபர் திரு.M. தங்கேஸ்வரன் அவர்களின் தலைமையில் சிறப்பானதாக இடம்பெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக வலயக்கல்வி பணிப்பாளர் திரு.R.உதயகுமார் அவர்களும் , விசேட அதிதிகளாக ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி.M.மயூரன், பாடசாலை Epsi திரு.M.யோகராஜா, Dr. S.அகிலன், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு. W.M.B.விஜயதுங்க பண்டார என்பவர்களும் நிகழ்வை கலந்து சிறப்பித்திருந்ததுடன்.
மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் நிகழ்வுகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கான பரிசுகளும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.