இராணுவத்தின் தலைமையில் கொரோணா விழிப்புணர்வு கூட்டம்: அக்கரைப்பற்று மாநகர சபை கேட்போர் கூடத்தில் இன்று….

வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோணா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுப்படுத்தும் நோக்கில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அக்கரைப்பற்று இராணுவமுகாம் ஏற்பாடு செய்த கூட்டம் இன்று (29) காலை அக்கரைப்பற்று மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடை பெற்றது.
அம்பாறை மாவட்ட 24 ஆம் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜே.சி.கமகே தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் அக்கரைப்பற்று 241 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் ஜானக விமலரட்ண ,அக்கரைப்பற்று மாநகரமேயர் ,ஆணையாளர், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர், அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி, அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளண உறுப்பினர்கள், ஜம்மியத்துல் உலமா சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கெரோனா அச்சறுத்தல் நிலவும் இக்காலகட்டத்தில் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதுடன் மக்களின் தேவைகள் மற்றும் அவற்றிற்கான தீர்வை பெற்றுக்கொடுக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் கட்டளை அதிகாரி உரையாற்று கையில் ஊரங்கு சட்டம் தளர்த்தப்படும் சந்தர்ப்பத்தில் மக்கள் கூட்டமாக செல்லாமல் இடைவெளிவிட்டு பொருட்கள் கொள்வனவு செய்ய செல்லுமாறும் அறிவுறுத்தல் வழங்கினார்.
சட்டத்தை மதித்து வீதிகளில் நடமாடாமல் வீடுகளில் இருந்து நோய் பரவாமல் சுகாதாரத்தை பேணி ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.
மேலும் மரண நல்லடக்கத்தின் போது போக்குவரத்து மேற்கொள்ளவும் அனுமதியளித்தல் அத்துடன் பள்ளிவாசல் ஒலி பெருக்கியில் மூன்று நாட்கள் துவாப்பிரார்த்தனை மேற்கொள்வதற்கும் இணக்கம் தெரிவித்தார்.