இலங்கை
சிவனருள் பவுண்டேசன் கணனி பயிற்சி நிலையத்தில் கணனி பயிற்சி நெறியை நிறைவு செய்த பயிலுனர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு….

சிவனருள் பவுண்டேசன் அமைப்பானது இலண்டன் இரத்தினம் பவுண்டேசனின் நிதி அனுசரணையில் நான்கு மாத கால Computer Application Assistant – CAA பயிற்சி நெறியை நடைமுறைப்படுத்தி அப்பயிற்சி நெறியை இனிதே நிறைவு செய்த 25 பயிலுனர்களுக்கு சான்றிதழ்கள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. எஸ்.மொகமட் றியாஸ்லீன், திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.செ. துர்க்காஷினி , இளைஞர் சேவை உத்தியோகத்தர் திரு.கே.பிரபாகரன், பயிற்றுவிப்பாளர் திரு. எஸ்.பர்ஜான், சிவனருள் பவுண்டேசன் செயலாளர் திரு.வே.வாமதேவன், பொருளாளர் திரு.ரி. ஜனார்த்தனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிவனருள் கணனி நிலையமானது மூன்றாம் நிலைக் கல்வி , தொழிற் கல்வி ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஓர் அமைப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.