தாண்டியடி விக்னேஷ்வரா பாடசாலைக்கு அறம் வழி அறக்கட்டளையினால் நீர் மின் மோட்டார் மற்றும் தளபாடங்கள் திருத்தி கையளிக்கும் வைபவம் நேற்று.

தாண்டியடி விக்னேஷ்வரா பாடசாலையில் அறம் வழி அறக்கட்டளையினால் நேற்று (12.09.2019) நீர் மின் மோட்டார் மற்றும் 28 தளபாடங்கள் திருத்தி தாண்டியடி விக்னேஷ்வரா பாடசாலை மாணவர்களுக்கு கையளிக்கும் வைபவம் இடம்பெற்றது.
இதற்காக அறம் வழி அறக்கட்டளையின் ஆலோசகர் திரு சிறிதரன் சேர் (உதவிக்கல்வி பணிப்பாளர்) அவர்களும், ஊடக இணைப்பாளர் தினேஸ் அவர்களும், உப தலைவர் சதீஸ்வரன் அவர்களும், நிர்வாக உத்தியோகத்தர் தரணிதரன், உதவி செயலாளர் நோபிராகவன் (ஆசிரியர்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் அதிபர் திரு.சிறிகாந்தன், வலயக்கல்வி பணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களும் குறித்த நிகழ்வில் பங்கு கொண்டு இருந்தனர்.
இவ்வாறு கல்வி மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்துவரும் அறம் வழி அறக்கட்டளை அமைப்பிற்கும் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கும் எமது ஆலையடிவேம்புவெப் இணையக்குழு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் மேலும் அவர்களின் நல்ல நோக்கம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.