வாழ்வியல்

தலையில் பேன் அதிகமானால் அவை உடலினுள் பரவும் என்பது தெரியுமா? தவிர்ப்பது எப்படி?

ஈறும், பேனும் பிடித்த தலை இருந்தால் அருகில் வருவதற்கு யோசிப்பார்கள். பெண் பிள்ளைகள், இளம்பெண்கள், நடுத்தர வயதை கொண்டிருக்கும் பெண்கள் என்று பலரும் பேன் தொல்லை அவஸ்தையை அனுபவித்தவர்களே. ஆனால் பலருக்கும் பேன் என்பது தலையில் இருக்கும் ஒரு ஒட்டுண்ணி என்பது தான் தெரியும். ஆனால் இவை உறுதியான கால்களால் தலையில் இறுக்கமாக பற்றிகொண்டு வாழும். ரத்தத்தை உறிஞ்சு வாழும் தன்மை கொண்ட பேன் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மிக சுலபமாக பரவக்கூடும். 2 முதல் 3 மி.மீ வரையே வளரகூடிய பேன் நிச்சயம் அருவருப்பு தரக்கூடியதே.

பேன்கள்

samayam tamil

பேன்கள் முடி இருக்கும் இடங்களில் வாழக்கூடியது. அந்த வகையில் அவை தலைமுடியில் மட்டுமே இருக்கும் என்று நினைத்தால் அதை மாற்றிகொள்ளுங்கள். நமது தலை முதல் பாதம் வரை இருக்கும் இடங்களில் மூன்று இடங்களில் இவை வசிக்ககூடும்.

வெளிச்சத்தை கண்டால் இவற்றுக்கு ஆகாது என்பதால் மயிர்க்கால்களை பிடித்துகொண்டு கூந்தலின் உட்புறத்தில் இருக்கும். பேன் இருக்கும் இடத்தை சுத்தம் செய்யாவிட்டால் கூந்தலில் ஒருவித துர்நாற்றம் உண்டாகும். இவை சருமத்துக்கும் முடிக்கும் பாதிப்பையே உண்டாக்கும். பேன்களின் வகைகள் குறித்து பார்க்கலாம்.

பெடிகுலஸ் என்னும் தலைப்பேன்

samayam tamil

இந்த வகை பேன்கள் தலையில் வசிக்கும். எளிதில் பற்றகூடியது இது. பேன் இருப்பவர்கள் பயன்படுத்திய சீப்பு, பிரஷ், டவல் போன்றவற்றை பயன்படுத்தினால் அவர்களுக்கும் பேன் வரக்கூடும். இரவு நேரத்தில் அவர்கள் அருகில் படுத்திருந்தாலும் இவர்களுக்கும் பேன் தொற்று உண்டாகும்.

பேன் தொற்று என்பதோடு இவை அருகில் உட்கார்ந்தாலே ஒருவரது தலையிலிருந்து தொற்றக்கூடும். பள்ளி குழந்தைகள் ஒன்றோடொன்று அருகில் அமர்ந்து தலையில் பேன் ஏற்றி வருவது அம்மாக்களுக்கு பெரும் பிரச்சனை. கண்ணுக்கு தெரியாத அளவிலிருந்து 4 மி.மீ வரை வளரும் பேன்களில் பெரிதாக இருப்பது பெண் பேன்கள் என்று சொல்கிறார்கள். இவை நம் உடலில் இருக்கும் ரத்தத்தை உறிஞ்சி எடுப்பதோடு நஞ்சு ரத்தத்தை உடலில் செலுத்திவிடுகிறது.

​சீலைப்பேன் என்னும் உடல் பேன்

samayam tamil

இவை எல்லோரிடமும் வருவதில்லை. மிக அழுக்கு படிந்த சுத்தமில்லாத ஆடைகளை அதிக நாள் தொடர்ந்து அணிந்தால் அவர்களிடம் பற்றிவிடுகிறது. இவர்கள் கூட்டம் கூட்டமாக வசிக்கும் போது இவர்களின் கும்பலில் நிச்சயம் இந்த சீலைப்பேன் இருக்கும். இவை ஆடையில் இருந்தாலும் தலைக்கு வருவதில்லை. எப்போதும் உடலிலேயே இருக்கும். ரத்தம் தேவைப்படும் போது மட்டுமே உடலுக்கு வரும். தவிர்க்க முடியாத சூழலில் சீலைப்பேன் பிரச்சனைக்கு உள்ளானால் தினமும் இரண்டு வேளை குளித்து ஆடைகளையும் சுத்தமாக துவைத்து பயன்படுத்தினால் சீலைப்பேனை தவிர்க்கலாம்.

​அடி வயிற்றுப்பேன் என்னும் நண்டுபேன்

samayam tamil

இவை உடலில் முடி இருக்கும் இடங்களில் வசிக்கும் . கண் புருவம், அக்குள், ஆண்களின் தாடி, மார்பு முடிகள், பெண்களின் அந்தரங்க இடங்களில் வசிக்க தொடங்கும். மற்ற இரண்டு பேன்களை காட்டிலும் இவை சிறிதாக இருக்கும். இதன் ஆயுளும் 15 முதல் 20 நாட்கள் வரையே. ஆனால் அதற்குள் இவை முட்டை ப் பொரித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் பேன் பெரியதாக இருக்கும். உருவத்தில் நண்டு போல் கொடுக்கை கொண்டிருப்பதால் இதை நண்டு பேன் என்று அழைப்பார்கள். இவை ஒரு நாளைக்கு 10 செமீ அளவு ஊர்ந்துசெல்லும். இதனுடைய எடையை காட்டிலும் பலமடங்கு ரத்தத்தை உறிஞ்சக்கூடியது, இவை உடலுறவின் மூலம் ஆணுக்கும் பரவி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவை வெகு சிலருக்கு மட்டுமே ஏற்படக்கூடியது.

பிரச்சனையும் தீர்வும்

samayam tamil

தலையில் பேன் இருந்தால் அதன் அரிப்பு சொல்ல முடியாத அளவுக்கு இருக்கும். சொறிந்து சொறிந்து அதிக பாதிப்பை உண்டாக்கியிருக்கிம். சிலருக்கு சொறிந்து தலையில் புண் கூட ஏற்பட்டிருக்கும். சீலைப்பேனால் சருமம் சிவந்தும், நண்டு பேனால் தீவிர அரிப்புடன் எரித்தீமா என்னும் சரும வியாதியும் வரக்கூடும்.

 

பெண்களை பெரிதும் பாதிக்கும் அதே போன்று ஆண்கள் அசுத்தமாக சுத்தமில்லாமல் இருந்தாலும் அவர்களிடமும் தொற்றும். இதற்கு தீர்வு ஒன்றே ஒன்றுதான். கூந்தலை அழுக்கில்லாமல் சுத்தமாக வைப்பது மட்டுமே. ஆடைகளிலும் உடலிலும் சுத்தம் பேணுவதன் மூலம் இந்த பிரச்சனை வராமல் காத்துகொள்ள முடியும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker