கல்விக்கான ”INVENT” இன் நிகழ்ச்சித்திட்டத்தில் தரம் -5ம் ஆண்டு பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான விசேட கல்வித் திட்டம், வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் இருந்து ஆரம்பம்….

கல்விக்கான நிகழ்ச்சித்திட்டமான ”INVENT” இன் செயற்பாட்டில் தரம் -5ம் ஆண்டு பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான விசேட கல்வித் திட்டம் வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் இருந்து ஆரம்பம்….
AID-MENTOR-LEAD of New Jersey இன் அனுசரணையுடன் யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவன் சோமசுந்தரம் வினோஜ்குமார் அவருடைய கண்டுபிடிப்பு மற்றும் கல்விக்கான ஊக்கப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டமான INVENT இன் செயற்பாட்டில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்ட பிந்தங்கிய பாடசாலைகளுக்கு தரம் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான விசேட ஒரு மாதகால கல்வித்திட்டத்தின் முதலாம் கட்டம் அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் நேற்று (09) நடைபெற்றது.
இதில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள 49 மாணவர்களுக்கான புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதில் பாடசாலையின் பிரதி அதிபர், திருக்கோவில் கல்வி வலயத்தின் கனிஷ்ட பிரிவு மாணவர்களுக்கான ஆசிரிய ஆலோசகர் பரமதயாளன் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். INVENT நிகழ்ச்சித்திட்டத்துக்காக சோமசுந்தரம் வினோஜ்குமார் தனது கண்டுபிடிப்புக்களின் மூலம் வரும் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை செலவழித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.