தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சிறந்த தேசியத்தின்பால் பற்றுறுதிமிக்க வேட்பாளர்களையே களத்தில் இறக்கியுள்ளது: மு.பா.உ கோடீஸ்வரன்….


வி.சுகிர்தகுமார்
பொதுத்தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் அம்பாரை மாவட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் மக்களின் ஆதரவை பெற்ற சமூக சேவகர்கள் எப்போதும் சமூகத்திற்காக குரல் கொடுத்தவர்கள். மக்களுக்காவே சேவை செய்ய முன்வந்தவர்கள். அவர்களை ஆதரிக்க வேண்டியது தமிழ் மக்கள் அனைவரது கடமையும் பொறுப்பும் ஆகும் என குறிப்பிட்டார்.
இதனை உணர்ந்தவர்களாக அம்பாரை மாவட்ட தமிழ் மக்கள் செயற்படுவார்கள் என நான் நம்புகின்றேன். ஏனெனில் அம்பாரை மாவட்ட தமிழ் மக்கள் எப்போதும் தமிழ் மீதும் தமிழ்த்தேசியத்தின் பற்றுறுதி கொண்டவர்களாக வாழ்ந்தவர்கள். அவர்களது கடந்த கால பல செயற்பாடுகள் இதற்கு சிறந்த உதாரணம். ஆகவே இம்முறையும் ஒற்றுமையோடு வெற்றி பெறும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்து தமிழர் பிரதிநிதியை உறுதி செய்வார்கள் என உறுதிபட நம்புவதாக கூறினார்.
மேலும் அம்பாரை மாவட்ட தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்து தமிழர்களின் இருப்பை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமை எனவும் சுட்டிக்காட்டினார்.



