இலங்கை

25 ஆம் திகதிமுதல் மாற்று தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட அதிபர் – ஆசிரியர் தீர்மானம்!

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கத்தினர் 25 ஆம் திகதி முதல் பாடசாலைக்கு சமுகமளித்து மாற்று தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுப்படத் தீர்மானித்துள்ளனர்.

அத்தோடு, அன்றைய தினமே பிற்பகல் 2 மணியளவில் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றி நாடு தழுவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுப்படவும் தீர்மானித்துள்ளனர்.

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று இலங்கை ஆசிரியர் – அதிபர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் 21 ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் கடமைக்கு சமுகமளிக்காமல் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படவும் ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கத்தினரால் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker