இலங்கை
தமிழரைப் பழிவாங்காதீர்!- கோட்டாவிடம் சம்பந்தன் இடித்துரைப்பு

இலங்கையிலுள்ள மூவின மக்களின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ செயற்பட வேண்டும். தமிழ் மக்களைப் புறக்கணிக்கும் வகையிலும், அவர்களைப் பழிவாங்கும் வகையிலும் அவர் செயற்படக்கூடாது.- இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்க் கிராமங்களுக்கும் நேரில் விஜயம் செய்து மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும்.
ஜனாதிபதியும், அவர் தலைமையிலான அரச தரப்பினரும் இனவாத சிந்தனையில் செயற்படக்கூடாது. சர்வதேசத்தின் நன்மதிப்பைப் பெறும் வகையில் அவர்கள் செயற்பட வேண்டும் – என்றார்.