ஆலையடிவேம்புஇலங்கை
Trending
தமிழரசுக் கட்சியின் அம்பாறை உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான கூட்டம்: இன்று ஆலையடிவேம்பில் சிவஞானம் சுமந்திரன் முன்னிலையில்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் இன்று (14) ஞாயிற்றுக்கிழமை காலை ஆலையடிவேம்பில் நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவி.கே.சிவஞானம் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொத்துவில் திருக்கோவில் காரைதீவு சம்மாந்துறை நாவிதன்வெளி ஆகிய பிரதேச சபைகளிலுள்ள கட்சியின் தவிசாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட ரீதியிலான பல்வேறு பிரச்சனைகள் தேவைகள் சவால்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
படங்கள்: ஹரிஷ் | தனுஷன்