உலகம்
சவுதி அரசாங்கத்திற்கு ஆதரவான முறையில் செயற்பட்ட டுவிட்டர் கணக்குகள் முடக்கம்!

சவுதி அரசாங்கத்திற்கு ஆதரவான முறையில் செயற்பட்ட கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் அறிவித்துள்ளது.

88 ஆயிரம் டுவிட்டர் கணக்குகள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முடக்கப்பட்ட கணக்குகள் தனது கொள்கைகளை மீறுவதாக டுவிட்டர் சுட்டிக்காட்டியுள்ளது.
சவுதி அதிகாரிகளுக்குச் சாதகமான கருத்துகளை வெளியிடுவது, அந்த கருத்துகளை அதிகமாக மறுபதிவு செய்வது, அதிகமாக லைக் செய்வது போன்ற செயல்களில் குறித்த கணக்கை ஆரம்பித்தவர்கள் செயற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.