விளையாட்டு
தனுஷ்க குணதிலகவின் இறுதி தீர்மானம்!

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
அவர் அது குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஒருநாள் மற்றும் ரி20 போட்டிகளுக்கு அதிக நேரம் ஒதுக்குவதற்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 வயதான தனுஷ்க குணதிலக, 2017 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமானதுடன், இதுவரையில் 8 டெஸ்ட் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.