இலங்கை
தண்ட பணத்தில் 10 வீதத்தை வழங்க வலி.தென் மேற்கு பிரதேச சபையில் தீர்மானம்!

நீதிமன்றினால் அறவிடப்படும் தண்டப்பணத்தில் 10 வீதத்தினை நீதி அமைச்சுக்கு வழங்க வலி.தென் மேற்கு பிரதேச சபை தீர்மானித்துள்ளது.
நீதிமன்றங்களில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு, அறவிடபடும் தண்ட பணம், அந்த பகுதி பிரதேச சபைகளுக்கு நீதி அமைச்சினால் வழங்கப்படும். அதனூடாக பிரதேச சபைகளுக்கு பெருமளவான வருமானங்கள் கிடைக்கப் பெற்று வந்தன.
இந்நிலையில் நீதிமன்றங்களின் அபிவிருத்திக்காக நீதிமன்றங்களால் விதிக்கப்படும் தண்ட பணத்தை வழங்குமாறு நீதி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
அதனைதொடர்ந்தே வலி.தென் மேற்கு பிரதேச சபை தண்ட பணத்தின் ஊடாக கிடைக்கும் வருமானத்தில் 10 வீதத்தினை, நீதி அமைச்சுக்கு வழங்க தீர்மானித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது