ஆலையடிவேம்பு சமூக அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட அக்கரைப்பற்று பகுதியில் டெங்கு ஒழிப்பு செயத்திட்டம் வெற்றிகரமாக இன்றையநாள் முடிவு…

மழையுடன் கூடிய காலநிலையினால் எமது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பல பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதாலும்,பல வீதிகளில் குப்பை கூளங்கள் காணப்படுவதனாலும் எமது பிரதேசமானது டெங்கு அச்சுறுத்தலுக்குட்பட்டதாக காணப்படுகின்றது.
இவற்றினை கருத்திற் கொண்டு டெங்கு ஒழிப்பு தொடர்பான செற்பாட்டினை ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றம், Alayadivembuweb.lk இணையத்தளம் மற்றும் ஆலையடிவேம்புவெப் சமூக அமைப்பு, கோளாவில் மக்கள் அபிவிருத்தி மையம், ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இவ் அமைப்புக்கள் ஆலையடிவேம்பு பொது சுகாதார வைத்திய அலுவலகம், ஆலையடிவேம்பு பிரதேச சபை,கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள், மகளிர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் ஆலையடிவேம்பு சமுர்த்தி வங்கி என்பவற்றின் பங்களிப்புடன் டெங்கு நுளம்பை அழிப்பதற்கான சிரமதான பணிகளை எமது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் முன்னெடுத்து வருகின்றது.
அந்தவகையில் இன்றைய தினம் அக்கரைப்பற்று-07, அக்கரைப்பற்று-7/1, அக்கரைப்பற்று-7/2, அக்கரைப்பற்று-7/3, அக்கரைப்பற்று-7/4 மற்றும் அக்கரைப்பற்று-8/1 எனும் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு சிரமதான பணிகள் வெற்றிகரமாக இடம்பெற்றது.
மேலும் நாளைய தினம் காலை 7.30 மணியளவில் அக்கரைப்பற்று-08, அக்கரைப்பற்று-8/2, அக்கரைப்பற்று-8/3, அக்கரைப்பற்று-09 மற்றும் வாச்சிக்குடா பிரதேசங்களிலும் டெங்கு ஒழிப்பு சிரமதான பணிகள் இடம்பெற உள்ளது.
இவ் டெங்கு ஒழிப்பு செயத்திட்டத்தில் ஆலையடிவேம்பு இளைஞர்கள் இணைந்து கொள்ளுங்கள் மற்றும் இணைந்து கொள்ளலாம்
மேலதிக விபரங்களுக்கு 0771925225