உலகம்

தங்கத்தை விற்று பணம் பெற உலகின் முதல் ATM

உலகின் முதல் தங்க ATM  இயந்திரத்தை சீன நிறுவனமொன்று உருவாக்கி சாதனை படைத்துள்ளது. குறித்த  ATM நிறுவனமானது ஷாங்காய்  வணிக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.

பழைய தங்க நகை, நாணயத்தை விற்று பணமாக்க பலரும் விரும்புகின்றனர். ஆனால், நஷ்டமின்றி தங்கத்துக்கு ஈடான முழுப்பணமும் எங்கும் கிடைக்காது என்பதால். தங்கத்தை விற்க  பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இதனைத் தவிர்க்கும் வகையில் சீனாவின் ஷாங்காய் நகரில், ‘சைனா கோல்ட்’ என்ற நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தங்க ATM சீன மக்களிடம் அமோக ஆதரவைப் பெற்றுள்ளது. இந்த இயந்திரத்தில், நகையை வைத்தால், அதை எடை போட்டு, எவ்வளவு என்பதை திரையில் காட்டும்.

அதை ஏற்று ஒப்புதல் அளித்தால், தங்கம் உருக்கப்பட்டு, அதற்குரிய பணம், வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும். சீன கிங்ஹுட் குழுமம் பராமரிக்கும் இந்த தங்க  ATM தங்கத்தின் தரத்தை பரிசோதித்து, அதற்கு ஈடான பணத்தை வங்கிக் கணக்கில் வரவு வைக்கும்.

மேலும் தினசரி தங்கத்தின்  விலையை ATM, திரையில் அறிவிப்பதாகவும், தங்கத்தை விற்றால் எங்கு கூடுதல் பணம் கிடைக்கும் என்று மக்கள் அலையாமல், அன்றைய விலையில் தங்கத்தை இந்த ATM இமில் வைத்து, தங்கள் வங்கிக் கணக்கில் உடனடியாக பணத்தைப் பெறலாம் என்றும் சைனா கோல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த  ATM இல் தங்கள் தங்கத்தை விற்று பணம்பெற நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker