இலங்கை
திருக்கோவில் மண்டானை பகுதியில் உருத்திர சேனையால் அனுப்பப்பட்ட சிவலிங்க திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டது….

ஜே.கே.யதுர்ஷன்
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச மண்டானை பகுதியில் உள்ள மலைக்கோயிலில் நேற்றைய தினம் (01.03.2022) மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு உருத்திர சேனையால் அனுப்பி வைக்கப்பட்ட சிவலிங்கத் திருமேனி மண்டாணை வேல்மலை கோவிலில் ஊர் மக்கள் புடைசூழ பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இன் நிகழ்வில் சிறுவர்களுக்கு உருத்திர சேனையால் அனுப்பி வைக்கப்பட்ட சிவ சின்னமான உருத்திராக்கமும் அணிவிக்கப்பட்டது.
மேலும் இந் நிகழ்வானது திருக்கோவில் மண்டானைப்பகுதியில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.