ஆலையடிவேம்பு
”டயலாக்” மற்றும் “மனுசத் தெரண” நிறுவனங்கள் இணைந்து அழிக்கம்பை தேவகிராமத்தில் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு….

மனிதாபிமானமே முதன்மையானது எனும் தொனிப்பொருளில் ”டயலாக்” மற்றும் “மனுசத் தெரண” நிறுவனங்கள் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை நாடு பூராகவும் முன்னெடுத்து வருகிறார்கள்.
அந்தவகையில் இன்றைய தினம் (02) அழிக்கம்பை தேவகிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தொகுதி உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் நிகழ்வு இலங்கை இராணுவத்தினர் ஒருங்கிணைப்புடன் இடம்பெற்றதுடன் ஆலையடிவேம்பு உதவி பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்திருந்தார்.
உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதன் மூலமாக குறித்த பிரதேச மக்கள் பயன் பெற்றமை குறிப்பிடத்தக்கது.