ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகத்தின் 40வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் 2023 ஆம் ஆண்டின் மாபெரும் கிரிக்கட் சுற்றுப்போட்டி……

அக்கரைப்பற்று, ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகத்தின் 40வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் 2023 ஆம் ஆண்டுக்கான மாபெரும் கிரிக்கட் சுற்றுப்போட்டி கடந்த (05) சனிக்கிழமை தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டு சுற்றுப்போட்டிகள் இடம்பெற்று வருகிறது.
குறித்த சுற்றுப்போட்டிக்காக ஜொலிபோய்ஸ் விளையாட்டு கழகத்தினரினால் தர்மசங்கரி விளையாட்டு மைதானம் முழுமையாக துப்புரவு செய்யப்பட்டுள்ளதுடன் மைதானத்தில் காணப்படும் ஒரு சுவர் பகுதியினை அலங்கரிக்கும் முகமாக சுவர் ஓவியம் வரைந்திருப்பதும் காணக்கூடியதாக இருப்பதுடன் மேற்படி செயற்பாடுகள் சிறந்த முன்னுதாரண செயற்பாடாகவும் பார்க்கப்படுகிறது.
மேலும் போட்டியில் 32 அணிகள் பங்குபற்றுவதுடன் அணிக்கு 11 பேர் கொண்ட 08 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட சுற்றுத் தொடராக இடம்பெற்றுவருவதுடன். சம்பியனாக தெரிவாகும் அணிக்கு 50,000/- ரொக்கப்பரிசு, கவர்ச்சிகரமான வெற்றிக்கிண்ணம் மற்றும் பதக்கங்களும் இரண்டாம் இடமாக தெரிவாகும் அணிக்கு 30,000/- ரொக்கப்பரிசு,கவர்ச்சிகரமான வெற்றிக்கிண்ணம் மற்றும் பதக்கங்களும் வழங்க இருக்கிறார்கள்.
மேலும் அனைத்துப் போட்டிகளுக்கும் ஆட்ட நாயகன் விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.