இரண்டாயிரத்தை கடந்த நிலையில் கொரோனா பரவாமலிருக்க அக்கரைப்பற்றில் இறைவனை பிரார்த்திக்கும் விசேட பூஜை

வி.சுகிர்தகுமார்
ஆலயத்தின் பங்குதந்தை அருட்திரு பி.தேவானந்தன் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் சகோ எஸ்.ஜெகநேசன் கலந்து கொண்டு இறைவனை பிரார்த்தித்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.
உலகளாவிய ரீதியில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில் நமது நாட்டிலும் இரண்டாயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில் இக்கொடிய கொள்ளை நோயிலிருந்து உலக மக்கள் அனைவரையும் காக்கும் பொருட்டு பூஜையில் கலந்து கொண்டவர்கள் இறைவனிடம் மன்றாட்டமாக வேண்டி நின்றனர்.
வழிபாடுகளில் சுகாதார அறிவுறுத்தல் காரணமாக குறிப்பிட்ட தேவன் அடியார்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் அம்பாரை மாவட்டத்தில் வாழும் அதிகளவான மக்கள் கொரோனாவின் தாக்கத்திலிருந்து மீண்டு விட்டோம் எனும் நிலையில் தமது அன்றாட செயற்பாடுகளை தற்பாதுகாப்பு செயற்பாடுகள் எதுவுமின்றி தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
