வெற்றிகரமாக இடம்பெற்ற (2023/2024) பல்கலைகழக அனுமதிக்காக விண்ணப்பிக்க எதிர்பார்த்துள்ள மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு….

(2023/2024) பல்கலைகழக அனுமதிக்காக விண்ணப்பிக்க எதிர்பாத்துள்ள மாணவர்கள் தங்கள் கற்கை நெறிகளை எவ்வாறு தெரிவு செய்வது எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது தொடர்பான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு இன்று(08) சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் கோளாவில், விநாயகர் மகா வித்தியாலயத்தில் ஆலையடிவேம்பு இணையக்குழுவின் (Alayadivembuweb.lk) ஏற்பாட்டிலும் ‘சத்தியம் வாழும் போதே வாழ்த்துவோம்’ அமைப்பின் அனுசரைணயுடன் வெற்றிகரமாக இடம்பெற்றது.
வளவாளர்களாக திருக்கோவில் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய முகாமையாளர் ந.சுதாகரன் மற்றும் கண்ணகி வித்தியாலய அதிபர் த.இராசநாதன் ஆகியோர் கலந்து கொண்டு திறன்பட பல தெளிவூட்டல்களுடன் வழிகாட்டல் கருத்தரங்கு இடம்பெற்றது.
நிகழ்வின் தொடக்க நிகழ்வின் பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் சிறப்பு அதிதிகளாக திருக்கோவில் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர், ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் க.கமலமோகனதாஸன் மற்றும் கோளாவில், விநாயகர் மகா வித்தியாலயத்தின் அதிபர் M.சண்டேஸ்வரன் ஆகியவர்கள் கலந்து நிகழ்வை சிறப்பித்து மாணவர்களுக்கு பயன்தரும் தங்கள் கருத்துக்களையும் வழங்கி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.












